இந்தியாவில் 12.7 பில்லியன் டாலர்கள் முதலீடு - அமேசான்

May 18, 2023

அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆதாம் செலிப்ஸ்கை நியமிக்கப்பட்டுள்ளார். அவர், 2030 ஆம் ஆண்டுக்குள், கிட்டத்தட்ட 12.7 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன், கடந்த 2016 முதல் 2022 வரை 3.7 பில்லியன் டாலர்கள் தொகை இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், இந்திய வர்த்தகம் மிகவும் பிரகாசமானதாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அமேசானின் முதலீடு மூலம், இந்தியாவின் ஜிடிபி, 2030 […]

அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆதாம் செலிப்ஸ்கை நியமிக்கப்பட்டுள்ளார். அவர், 2030 ஆம் ஆண்டுக்குள், கிட்டத்தட்ட 12.7 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன், கடந்த 2016 முதல் 2022 வரை 3.7 பில்லியன் டாலர்கள் தொகை இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், இந்திய வர்த்தகம் மிகவும் பிரகாசமானதாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அமேசானின் முதலீடு மூலம், இந்தியாவின் ஜிடிபி, 2030 ஆம் ஆண்டில் 23 பில்லியன் டாலர்களாக உயரும் என்று கூறியுள்ளார்.

கிளவுட் கம்ப்யூட்டிங் துறையின் முக்கிய டிஜிட்டல் கட்டமைப்புகள் சார்ந்து, இந்தியாவில் முதலீடு செய்யப்பட உள்ளது. மேலும், உலக அளவில், சாட் ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், அமேசான் நிறுவனம் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் பல்வேறு புதிய திட்டங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu