சமுதாய மற்றும் வகுப்பு நலினக்கத்திற்காக வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சமுதாய மற்றும் வகுப்பு நல்லினத்திற்காக கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை பெற அனைத்து இந்திய குடிமக்களும் தகுதியானவர்கள். இது முற்றிலும் சாதி, இனம் வகுப்பைச் சார்ந்தவர்கள், பிற ஜாதி வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது உடைமைகளோ கலவரத்தின் போது அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரது உடல் மற்றும் மன வலிமையை பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது. இது தலா ஒரு நபர் வீதம் மூன்று பேருக்கு வழங்கப்படும். அது முறையே இருபதாயிரம்,பத்தாயிரம் மற்றும் ஐந்து ஆயிரத்திற்கான காசோலைகளாக வழங்கப்படும். இதனை பெறுவதற்கான விண்ணப்பங்கள் https://awards.tn.govt.in என்ற இணையதளத்தில் 15.12.2023 அன்று அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.