ஒடிசா பெட்ரோ கெமிக்கல் காம்ப்ளக்ஸ் - ஐஓசி 61077 கோடி முதலீடு

March 23, 2023

இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஒடிசாவில் 61077 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. பாரதிப் பகுதியில் புதிய பெட்ரோ கெமிக்கல் ஆலையை அமைப்பதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது. ஒரே பகுதியில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில், இது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மிகப்பெரிய முதலீடாக சொல்லப்பட்டுள்ளது. இங்கு திட்டமிடப்பட்டுள்ள ஆலையில், கச்சா எண்ணெய் நேரடியாக ரசாயன மாற்றம் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் உள்ளிட்ட இதர பொருட்கள் தயாரிப்பிற்கு ஏற்றவாறு மாற்றப்படுகிறது. இதன் மூலம் 5 - […]

இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஒடிசாவில் 61077 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. பாரதிப் பகுதியில் புதிய பெட்ரோ கெமிக்கல் ஆலையை அமைப்பதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது. ஒரே பகுதியில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில், இது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மிகப்பெரிய முதலீடாக சொல்லப்பட்டுள்ளது.

இங்கு திட்டமிடப்பட்டுள்ள ஆலையில், கச்சா எண்ணெய் நேரடியாக ரசாயன மாற்றம் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் உள்ளிட்ட இதர பொருட்கள் தயாரிப்பிற்கு ஏற்றவாறு மாற்றப்படுகிறது. இதன் மூலம் 5 - 6% ஆக உள்ள ஐஓசி -ன் பெட்ரோ கெமிக்கல் திறன் 10 - 12% ஆக உயரும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக், பெயிண்ட், மருந்து பொருட்கள், வேளாண் உரங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இது துணை புரியும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu