ஐபிஎல் 2024: முதல் தகுதி சுற்றில் இன்று கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதல்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதி சுற்றில் இன்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. 17 ஆவது ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இறுதி கட்டம் நெருங்கிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் ஆகிய நான்கு அணிகள் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு […]

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதி சுற்றில் இன்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.

17 ஆவது ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இறுதி கட்டம் நெருங்கிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் ஆகிய நான்கு அணிகள் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதன்படி இன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ள இறுதி போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற உள்ளது. அதன்படி இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu