கத்தாரில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்கியதற்கு பதிலடியாக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வேளையில், இந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளன. தொடர் மோதலுக்கு பின், இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு சம்மதித்துள்ளன என டொனால்ட் டிரம்ப் அறிவித்தாலும், ஆரம்பத்தில் ஈரான் மறுத்தது. ஆனால் பின்னர், போர் நிறுத்தத்தை ஈரான் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது. இது மத்திய கிழக்கு நிலவரத்தில் புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.