தெற்கு ஈரானில் பல பகுதிகளில் வரலாறு காணாத வெப்பம் அதிகரித்து வருவதால், ஈரானில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானில் தெற்கு நகரமான அஹ்வாஸில் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த வரலாறு காணாத வெப்பம் காரணமாக ஈரானில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்கும்படி ஈரான் அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மருத்துவமனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளைய வெப்பநிலை தெஹ்ரானில் 39 செல்சியஸ் ஆக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.














