ஈரானின் மத்திய கிழக்கு நாடுகள் சார்ந்த கொள்கைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மாலத்தீவு கருத்தியதால் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவு 2016 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஐநா சபையின் 78வது கூட்டம் சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. அப்போது ஈரான் வெளியுறவு மந்திரி அமீர் மற்றும் மாலத்தீவுகள் வெளியுறவு முந்திரி அகமது ஆகியோர் தூதரக உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை அடுத்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தூதரக உறவை தொடங்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், இரு நாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.