அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளத்தை ஈரான் ஏவுகணைகளால் தாக்கியுள்ளது. இது அமெரிக்கா மேற்கொண்ட அணுசக்தி மையத் தாக்குதலுக்கு பதிலடியாக ஏற்படுத்திய நடவடிக்கையாக ஈரான் விளக்கியுள்ளது.
இதையடுத்து, வளைகுடா நாடுகள் பாதுகாப்பு காரணங்களால் தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடத் தொடங்கியுள்ளன. கத்தாருடன் சேர்ந்து குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் வான்வெளி மூடலை அறிவித்துள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. “சேஃப் ஏர்ஸ்பேஸ்” அமைப்பின் தரவின்படி, இந்த பகுதியில் ஏவுகணை மற்றும் டிரோன் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.