உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை ஈரான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக, ஈரான் நாடு சொந்தமாக செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது. மேலும், ஏவுகணை சோதனைகளையும் நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது. அந்நாட்டு விண்வெளி நிறுவனம், தகவல் தொடர்பு, புவிசார் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு உதவும் செயற்கைக்கோள்களை தயாரித்துள்ளது. அவை, அந்நாட்டு பாதுகாப்பு துறை தயாரித்த சிமோர்க் என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த நிலையில், செயற்கைக்கோள்கள் சோதனைகள் நடத்தியதன் மூலம், ஐநா பாதுகாப்பு குழுவின் தீர்மானத்தை ஈரான் மீறி உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.