இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

April 24, 2024

இஸ்ரேலில் உள்ள ராணுவ தலைமையகம் ஹிஸ்புல்லா இயக்கம் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்கிறது. இந்நிலையில், வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தலைமையகம் இந்த இயக்கம் ராக்கெட்டுகளை வீசி நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள கிராமங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் ஒரு ஹிஸ்புல்லா வீரர் உயிரிழந்தார். அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் […]

இஸ்ரேலில் உள்ள ராணுவ தலைமையகம் ஹிஸ்புல்லா இயக்கம் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்கிறது. இந்நிலையில், வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தலைமையகம் இந்த இயக்கம் ராக்கெட்டுகளை வீசி நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள கிராமங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் ஒரு ஹிஸ்புல்லா வீரர் உயிரிழந்தார். அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருப்பதாவது, லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிக்குள் 35 ஏவுகணைகள் வீசப்பட்டன. அவை அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டது என்றது.

இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் தொடர்பான செயற்கைக்கோள் படத்தையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் எல்லைக்கு அப்பால் தொலைவில் உள்ள இஸ்ரேல் நிலை மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய முதல் தாக்குதலாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu