அரசு எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஈரான் நடிகை கைது

December 19, 2022

ஈரானின் அரசு எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஈரான் நடிகை தாரனே அலிதூஸ்டி கைது செய்யப்பட்டார். ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை அரசு ஒடுக்கியது. இதில் 500-க்கும் அதிகமானோர் பலியாகினர். இதனிடையே அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 18 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் போராட்டத்தின் […]

ஈரானின் அரசு எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஈரான் நடிகை தாரனே அலிதூஸ்டி கைது செய்யப்பட்டார்.

ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை அரசு ஒடுக்கியது. இதில் 500-க்கும் அதிகமானோர் பலியாகினர். இதனிடையே அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 18 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் போராட்டத்தின் போது பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கு சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஈரானை சேர்ந்த புகழ்பெற்ற நடிகை தாரனே அலிதூஸ்டி போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தும் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் அவர் ஈரானின் மரண தண்டனைக்கு எதிராக பேசும்படி சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் போராட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாக குற்றம் சாட்டி நடிகை தாரனே அலிதூஸ்டியை ஈரான் போலீசார் நேற்று கைது செய்தனர். 38 வயதான தாரனே அலிதூஸ்டி ஆஸ்கார் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu