ஈரான் பிரதமர் இப்ராஹிம் ராய்சி, ஒரு நாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். முன்னதாக அவர் பாகிஸ்தானுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டார். மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், அவரது வருகை உற்று நோக்கப்படுகிறது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் அழைப்பை ஏற்று இப்ராஹிம் ராய்சி இலங்கை சென்றுள்ளார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் மிகப்பெரிய நீர்ப்பாசன மற்றும் நீர் மின் உற்பத்தி திட்டம் உமா ஓயா பல்நோக்கு வளர்ச்சி திட்டமாகும். இதனை ஈரான் பிரதமர் தொடக்கி வைக்கிறார். மேலும், இந்த பயணத்தின் போது, ஈரான் மற்றும் இலங்கை இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.














