ஈரான் அதிபர் ரெய்சி சீனா பயணம்

February 13, 2023

ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரெய்சி, நாளை, 3 நாள் அரசு முறைப் பயணமாக சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார். சீனா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரானவை என்பதால், இந்த சந்திப்பு சர்வதேச முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று, ரெய்சி வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் அறிவித்துள்ளார். இருநாட்டு […]

ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரெய்சி, நாளை, 3 நாள் அரசு முறைப் பயணமாக சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார். சீனா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரானவை என்பதால், இந்த சந்திப்பு சர்வதேச முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று, ரெய்சி வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் அறிவித்துள்ளார்.

இருநாட்டு தலைவர்களின் சந்திப்பின்போது, இருநாட்டு வர்த்தக உறவுகள் குறித்த பல்வேறு ஆவணங்கள் கையெழுத்தாக உள்ளன. இரு நாடுகளைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் இந்த சந்திப்பில் உடன் இருப்பர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தலைவர்கள் இருவரின் சந்திப்பின் மூலம், இருநாட்டு அரசியல் மற்றும் பொருளாதார உறவு மேம்படுவதுடன், அமெரிக்காவுக்கு எதிரான ஒத்துழைப்பும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu