கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஈரான் அணி தோல்வியுற்று, தொடரில் இருந்து வெளியேறியது. இதனை கொண்டாடியதற்காக, ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில், கடந்த 1979 ஆம் ஆண்டு முதல், மோதல் உள்ளது. இந்நிலையில், மெஹ்ரான் சமக் என்ற 27 வயது இளைஞர், அமெரிக்காவிடம் ஈரான் தோல்வி அடைந்ததை கொண்டாடியதாக கூறப்படுகிறது. எனவே, அவரைக் குறிவைத்து, அவர் காரில் இருந்த போது, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தலையில் சுட்டு கொன்றுள்ளதாக, ஈரான் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் தீவிரமாக நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, முதல் போட்டியில் தேசிய கீதத்தை பாட மறுத்த ஈரான் நாட்டு கால்பந்து வீரர்கள், அடுத்தடுத்த போட்டிகளில் பாடத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.