ஈராக் அதிபராக அப்துல் லத்தீப் ரஷீத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

October 14, 2022

மேற்காசிய நாடான ஈராக்கில், கடந்த 2021 அக்டோபரில், தேர்தல் நடைபெற்றது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, நீண்ட நாட்களுக்கு பிறகு, குர்தீஷ் இனத் தலைவர் அப்துல் லத்தீப் ரஷீத் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று, பாக்தாத்தில், பல ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அது கழிந்த சில மணி நேரங்களில், புதிய அதிபர் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில், ரஷீத் 160 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட […]

மேற்காசிய நாடான ஈராக்கில், கடந்த 2021 அக்டோபரில், தேர்தல் நடைபெற்றது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, நீண்ட நாட்களுக்கு பிறகு, குர்தீஷ் இனத் தலைவர் அப்துல் லத்தீப் ரஷீத் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று, பாக்தாத்தில், பல ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அது கழிந்த சில மணி நேரங்களில், புதிய அதிபர் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில், ரஷீத் 160 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சாலே 99 வாக்குகளும் பெற்றிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 78 வயதாகும் ரஷீத், இங்கிலாந்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஈராக் அமைச்சரவையில் 2003 முதல் 2010 வரை, நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக்கில், நடப்பு ஆண்டில், பிப்ரவரி 7 முதல் மார்ச் 30 வரை, தொடர்ச்சியாக மூன்று முறை புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர், நடந்து முடிந்த வாக்குப்பதிவின் முதல் சுற்றில், இரண்டுக்கு மூன்று என்ற பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால், வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தொடர்ச்சியாக ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனினும், வாக்குப்பதிவு நிறைவடைந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ராக்கெட் தாக்குதல்கள் குறித்து ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ட்விட்டரில், “ஜனநாயக நடைமுறையை தடுக்கும் எந்தவித தாக்குதலையும் வன்மையாக கண்டிக்கிறோம். என்ன நடந்தாலும், இந்த ஜனநாயக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணப்படும்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, கடந்த மாதத்தில் நடைபெற்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தலின் போதும், இதே போன்று ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu