போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஆதரவு - இஸ்ரேல் அதிருப்தி

May 7, 2024

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டு போர் நிறுத்தத்திற்கு தயார் என்று கூறியுள்ளது. காசா போரில் இதுவரை 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் ஒப்பந்தம் முன்மொழிந்து உள்ளன. இதனை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டு போர் நிறுத்தத்திற்கு தயார் என்று கூறியுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. […]

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டு போர் நிறுத்தத்திற்கு தயார் என்று கூறியுள்ளது.

காசா போரில் இதுவரை 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் ஒப்பந்தம் முன்மொழிந்து உள்ளன. இதனை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டு போர் நிறுத்தத்திற்கு தயார் என்று கூறியுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும், எகிப்து அதிகாரிகள் இது குறித்து கூறும்போது, விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று கூறினர். காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்பட்டால் ஹமாஸ் அமைப்பு பணய கைதிகளை விடுவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த போரை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இஸ்ரேல் படைகள் முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு கோரிக்கைகள் வைத்துள்ளது. எனினும் அது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த ஒப்பந்தத்திற்கு இன்னும் இஸ்ரேல் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்கள் இஸ்ரேலுக்கு ஏற்புடையதாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அது தொடர்ந்து ரபாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu