காசாவில் 130 ஹமாஸ் சுரங்கங்கள் அழிப்பு

November 9, 2023

ஹமாஸ் அமைப்பின் 130 சுரங்கங்களை அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. தற்போது இஸ்ரேல் படை காசாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் டேனியல் கூறுகையில், இதுவரை ஹமாஸ் அமைப்பின் 130 சுரங்கப்பாதை நிலைகள் அழிக்கப்பட்டுள்ளது. அங்கு போரிடும் வீரர்களுடன் இஸ்ரேல் ராணுவ பொறியாளர்களும் குழுவாக சென்றுள்ளனர். அந்த குழு ஹமாஸ் அமைப்பின் சுரங்க நிலைகள் மற்றும் அங்குள்ள […]

ஹமாஸ் அமைப்பின் 130 சுரங்கங்களை அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. தற்போது இஸ்ரேல் படை காசாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் டேனியல் கூறுகையில், இதுவரை ஹமாஸ் அமைப்பின் 130 சுரங்கப்பாதை நிலைகள் அழிக்கப்பட்டுள்ளது. அங்கு போரிடும் வீரர்களுடன் இஸ்ரேல் ராணுவ பொறியாளர்களும் குழுவாக சென்றுள்ளனர். அந்த குழு ஹமாஸ் அமைப்பின் சுரங்க நிலைகள் மற்றும் அங்குள்ள ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய பணி சுரங்க நிலைகளை கண்டுபிடிப்பது, அதனை வெடிவைத்து தகர்ப்பது போன்றதாகும். இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் மூலம் பூமிக்கு அடியில் ஹமாஸ் அமைந்துள்ள உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு வருகிறது என்றார். அதோடு ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்கள் அழிக்கப்படும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu