காசாவில் மேலும் ஆறு பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
காசா போரில் இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காசாவில் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு காசாவில் ஆறு பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இன்னும் 110 இஸ்ரேல் பணய கைதிகள் ஹமாஸ் வசம் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 100 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் பேச்சுவார்த்தையின் போது விடுவித்தனர். மீதமுள்ளவர்களை மீட்க அமெரிக்கா மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.