இந்தியா உலகிற்கு புத்தரை கொடுத்தது, யுத்தத்தை அல்ல என்று பிரதமர் மோடி ஆஸ்திரியாவில் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஆஸ்திரியா சென்றார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் மற்றும் பிரதமர் கார்ல் நெக்மரை சந்தித்து பேசினார். அதோடு அங்குள்ள இந்தியர்களை சந்தித்து மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக தங்களது திறமை மற்றும் அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து வருகின்றனர். இந்தியா உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளது. யுத்தத்தை கொடுக்கவில்லை. அமைதி மற்றும் வளர்ச்சியை மட்டுமே இந்தியா கொடுக்கிறது. இதனாலேயே 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா வலிமை பெற்று வருகிறது என்று பேசினார்.
முன்னதாக ரஷ்யாவில் பயணம் மேற்கொண்ட பிரதமர் அங்கு மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் போரை நிறுத்துவதற்காகவே இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார். பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் இன்று காலை தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார்.