ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்களுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

February 5, 2024

ஹிஸ்புல்லா அமைப்பு மீது போர் தொடுக்க உள்ளதாக இஸ்ரேல் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. காசா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுத குழுவினர் இறங்கியுள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் வடக்கு எல்லை பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது […]

ஹிஸ்புல்லா அமைப்பு மீது போர் தொடுக்க உள்ளதாக இஸ்ரேல் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

காசா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுத குழுவினர் இறங்கியுள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் வடக்கு எல்லை பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் கூறுகையில், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக போர் தொடுப்பது எங்களுடைய முக்கியத்துவம் கிடையாது. ஆனால் நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம். சிரியா, லெபனான் மற்றும் யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றார். முன்னதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் பேசும்போது ஹமாசுடன் ஏற்படும் போர் நிறுத்த ஒப்பந்தத்தால் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என்று அர்த்தம் கிடையாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu