சர்வதேச நீதிமன்றத்தில் தென்ஆப்பிரிக்காவை எதிர்க்க தயாராக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை இந்த போர் மூலம் மீறுவதாகவும், இந்த தாக்குதல்களை நிறுத்த ஆணை பிறப்பிக்குமாறும் நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தது.
இதுகுறித்து இஸ்ரேல் தரப்பில் கூறுகையில் தென்னாப்பிரிக்காவின் இந்த அபத்தமான குற்றச்சாட்டை சர்வதேச நீதிமன்றத்தில் எதிர்க்க உள்ளோம் என்று இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும் இந்த போருக்கு ஹ மாஸ் அமைப்பு மட்டுமே முழு பொறுப்பு என்றும் கூறியுள்ளார். ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை சட்டத்தை கொண்டு மறைக்கும் முயற்சி இது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இதற்கிடையே, ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் காசா போரில் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.