லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 ஹிஜ்புல்லா தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டனர்.
லெபனானின் தெற்கே குவார்தவனை பகுதியில் இஸ்ரேல் படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் மேற்கு பகுதியை சேர்ந்த ரத்வான் படையின் ஏவுகணை பிரிவு தளபதி முகமது உசேன் ஷா ஹவுரி கொல்லப்பட்டார். இவர் லெபனானின் மேற்கத்திய பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டார் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதேபோன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் ஏவுகணை பிரிவை சேர்ந்த மக்மூத் இப்ராஹிம் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். லெபனானின் தெற்கு பகுதியில் நடந்த தாக்குதலில் கடலோர பிரிவு தளபதியான இஸ்மாயில் கொல்லப்பட்டார் இவர்கள் மூவரின் உயிரிழப்பை ஹிஜ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.