லெபனான் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகிய சம்பவத்திற்கு இஸ்ரேல் மன்னிப்பு கோரியது.
சமீபத்தில் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேல் ராணுவத்தின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன் பின்னர், அமெரிக்கா இஸ்ரேலை போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளது. இதற்கிடையில், வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் விமானங்கள் நள்ளிரவில் குண்டுமழை பொழிந்தது. அதில் ஒரு அடுக்குமாடி கட்டிடமும், 4 வீடுகளும் தரைமட்டமாகின. இதில் 87 பேர் உயிரிழந்தனர். மேலும், லெபனான் ராணுவ வீரர்களின் டிரக் மீது குண்டு விழுந்ததில் 3 வீரர்கள் பலியாகினர். இதற்கு மன்னிப்பு கோரிய இஸ்ரேல், லெபனான் ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தாக்குதலுக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளது.














