ராஃபா தாக்குதலில் 67 போ் பலி - 2 பிணைக்கைதிகள் விடுவிப்பு

February 13, 2024

காசா எல்லை பகுதியான ராஃபாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 67 பேர் பலியாகியுள்ளனர். காசா, எகிப்து இடையேயான எல்லைப் பகுதியில் ராஃபா நகரம் உள்ளது. இந்த நகரில் நேற்று இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 67 பேர் பலியாகி உள்ளனர். அப்பொழுது நடைபெற்ற தாக்குதலில் இரண்டு பிணைக்கைதிகளை இஸ்ரேல் படையினர் மீட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ராஃபா நகரில் திங்களன்று இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் 67 […]

காசா எல்லை பகுதியான ராஃபாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 67 பேர் பலியாகியுள்ளனர்.

காசா, எகிப்து இடையேயான எல்லைப் பகுதியில் ராஃபா நகரம் உள்ளது. இந்த நகரில் நேற்று இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 67 பேர் பலியாகி உள்ளனர். அப்பொழுது நடைபெற்ற தாக்குதலில் இரண்டு பிணைக்கைதிகளை இஸ்ரேல் படையினர் மீட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ராஃபா நகரில் திங்களன்று இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் 67 பேர் பலியாகி உள்ளனர். இத்துடன் காசா பலி எண்ணிக்கை 28,340 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 67 ஆயிரத்து 984 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ராஃபா நகரில் பாதுகாப்பான கட்டிடம் ஒன்றில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு ஹமாஸ் அமைப்பினரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிணை கைதிகளை மீட்டனர். அவர்கள் இருவரையும் அடையாளம் கண்டுள்ளனர்.

தற்போது ராஃபா நகரம் இஸ்ரேல் படையின் தரைவழி தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது. காசாவில் வசித்து வந்த 23 லட்சம் பேர் இந்த போரால் பாதிக்கப்பட்டு ராஃபா நகரில் தான் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடம் பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாக அமைந்துள்ளது என்ற போதிலும் கடந்த சில காலமாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து இப்பகுதியில் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த இடத்தை விரைவில் கைப்பற்ற போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது பரவலாக கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஃபாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தினால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று ஐநா மற்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu