தெற்கு காசாவின் நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

February 16, 2024

தெற்கு காசாவில் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. காசாவில் ஹமாஸ் இஸ்ரேலிடையே போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு காசாவில் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. அப்போது நோயாளி ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு முன்னதாக மருத்துவமனையில் இருந்து பொதுமக்களும் நோயாளிகளும் […]

தெற்கு காசாவில் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது.

காசாவில் ஹமாஸ் இஸ்ரேலிடையே போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு காசாவில் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. அப்போது நோயாளி ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு முன்னதாக மருத்துவமனையில் இருந்து பொதுமக்களும் நோயாளிகளும் வெளியேறுவதற்கு தனி பாதை திறந்து வைத்தனர் ராணுவத்தினர். கடந்த சில நாட்களாக இந்த மருத்துவமனை நகரின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த மருத்துவமனையில் பிணை கைதிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கிடையே இஸ்ரேல் ராணுவத்தின் மீது லெபனானில் இருந்து ராக்கெட் வீசப்பட்டது. இதில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் விமானப்படை அங்கு குண்டு மழை பொழிந்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu