ரயில்வே தண்டவாளங்களில் நடத்தப்பட்ட ககன்யான் திட்டத்தின் பாராசூட் பரிசோதனை - இஸ்ரோ

ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் பரிசோதனையை கடந்த மார்ச் 1, 3 ஆம் தேதிகளில் இஸ்ரோ நடத்தி உள்ளது. இந்த பரிசோதனை ரயில்வே தண்டவாளங்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில், 2 பாராசூட்டுகள் சோதிக்கப்பட்டன. முதலாவது, குறைந்த கோணத்தில் வெளிவருவது போலவும், மற்றொன்று அதிகமான கோணத்தில் வெளிவருவது போலவும் சோதனை செய்யப்பட்டது. இந்த இரு பாராசூட்டுகளும், ககன்யான் திட்டத்திற்கான முதன்மை பாரசூட்டுகளை இயக்குவதற்கு மிக முக்கியமானதாக சொல்லப்பட்டுள்ளன. அடுத்ததாக, அதிக மாற்றங்களைக் கொண்ட அழுத்தமான சூழலில், இந்த பாராசூட்டுகள் […]

ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் பரிசோதனையை கடந்த மார்ச் 1, 3 ஆம் தேதிகளில் இஸ்ரோ நடத்தி உள்ளது. இந்த பரிசோதனை ரயில்வே தண்டவாளங்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனையில், 2 பாராசூட்டுகள் சோதிக்கப்பட்டன. முதலாவது, குறைந்த கோணத்தில் வெளிவருவது போலவும், மற்றொன்று அதிகமான கோணத்தில் வெளிவருவது போலவும் சோதனை செய்யப்பட்டது. இந்த இரு பாராசூட்டுகளும், ககன்யான் திட்டத்திற்கான முதன்மை பாரசூட்டுகளை இயக்குவதற்கு மிக முக்கியமானதாக சொல்லப்பட்டுள்ளன. அடுத்ததாக, அதிக மாற்றங்களைக் கொண்ட அழுத்தமான சூழலில், இந்த பாராசூட்டுகள் வெளிவருவது சோதனை செய்யப்பட்டது. குறிப்பாக, 90 டிகிரி கோணத்தில் பாராசூட்களின் செயல்பாடு சோதனை செய்யப்பட்டது. சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ரிசர்ச் லெபாரட்டரியில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu