இந்திய இஸ்ரோ மற்றும் அமெரிக்க நாசா இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோள், வருகிற ஜூலை 30ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்–16 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.
743 கி.மீ உயரத்தில் சூரிய ஒத்திசைவான பாதையில் சுற்றும் இந்த செயற்கைக்கோளில், நாசாவின் எல்-பேண்ட், இஸ்ரோவின் எஸ்-பேண்ட் ரேடார்கள் இணைக்கப்பட்டுள்ளன. ‘ஸ்வீப்சார்’ என்ற புதிய தொழில்நுட்பத்துடன், தரை சிதைவு, பனிப்படல இயக்கம், மண் ஈரப்பதம், மேற்பரப்பு நீர்வளம், பேரிடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு புவி மாற்றங்களை 12 நாள் இடைவெளியில், பகலும் இரவும் தடையின்றி பதிவு செய்யக்கூடிய திறனுடையது. இது உலகளாவிய சூழலியல் ஆய்வுகளில் பெரும் புரட்சியாகக் கருதப்படுகிறது. 10 ஆண்டுகள் நெருங்கிய ஒத்துழைப்பின் விளைவாக இப்பணியில் இஸ்ரோ–நாசா விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.