ஓஷன்சாட் 3 மற்றும் 8 நானோ செயற்கைக் கோள்களுடன் நவம்பர் 26ல் விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி 54 - இஸ்ரோ அறிவிப்பு

November 21, 2022

வரும் நவம்பர் 26ம் தேதி, இஸ்ரோ நிறுவனம், ஓஷன்சாட் 3 மற்றும் 8 நானோ செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது. சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு, பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட் மூலம் இவை ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பூட்டான் நாட்டின் ‘பூட்டான் சாட்’, பிக்சல் நிறுவனத்தின் ‘ஆனந்த்’ செயற்கைகோள், துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் 2 ‘தைப்போல்ட்’ செயற்கைக்கோள் மற்றும் ஸ்பேஸ் பிளைட் யு எஸ் ஏ வின் 4 ‘அஸ்ட்ரோ காஸ்ட்’ செயற்கைகோள்கள் […]

வரும் நவம்பர் 26ம் தேதி, இஸ்ரோ நிறுவனம், ஓஷன்சாட் 3 மற்றும் 8 நானோ செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது. சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு, பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட் மூலம் இவை ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

பூட்டான் நாட்டின் ‘பூட்டான் சாட்’, பிக்சல் நிறுவனத்தின் ‘ஆனந்த்’ செயற்கைகோள், துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் 2 ‘தைப்போல்ட்’ செயற்கைக்கோள் மற்றும் ஸ்பேஸ் பிளைட் யு எஸ் ஏ வின் 4 ‘அஸ்ட்ரோ காஸ்ட்’ செயற்கைகோள்கள் ஆகியவை இம்முறை விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இவை அனைத்தும் நானோ செயற்கைகோள்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நவம்பர் 8ம் தேதி, ஓஷன்சாட் 3 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவது குறித்து ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைகோள்கள் புவியியல் மற்றும் கடல் சார் கண்காணிப்பு போன்றவற்றுக்கானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu