கடந்த சனிக்கிழமை இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. தற்போது, இந்த செயற்கைக்கோள் சுற்றுவட்ட பாதையில் இருப்பதை உறுதி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
S2a Systems என்ற தனியார் நிறுவனம், பூமிக்கு வெளியே உள்ள விண்வெளி பொருட்களை புகைப்படம் எடுத்து ஆய்வு பணிகள் மேற்கொள்கிறது. இந்த நிறுவனம் இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் சுற்றுவட்ட பாதையில் உள்ளதை படம்பிடித்து காணொளியாக வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில், செயற்கைக்கோளுக்கு பின் ஜி எஸ் எல் வி ராக்கெட் சுழல்வதும் படமாக்கப்பட்டுள்ளது. பூமத்திய கோட்டுக்கு மேலே, 35000 கிலோமீட்டர் உயரத்தில் இன்சாட் 3 டி எஸ் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இன்சாட் 3 டி எஸ் செயல்பாட்டில் இருக்கும் என இஸ்ரோ கணித்துள்ளது.