இஸ்ரோவின் ஸ்பேட் எக்ஸ் பரிசோதனை - விரிவான தகவல்கள்

December 17, 2024

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் முக்கியமான சோதனையான ஸ்பேஸ் டோக்கிங் எக்ஸ்பெரிமெண்ட் - ஸ்பேட் எக்ஸ் (Spadex) எனும் திட்டத்தை டிசம்பர் 30-ம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயல்படுத்தவுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற, ஏவப்பட்ட தேதியில் இருந்து சுமார் 10 நாட்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 'சேசர்' மற்றும் ‘டார்கெட்’ என இரண்டு செயற்கைக்கோள்கள் தனித்தனியாக விண்ணில் ஏவப்படும், பின்னர் அவை விண்வெளியில் […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் முக்கியமான சோதனையான ஸ்பேஸ் டோக்கிங் எக்ஸ்பெரிமெண்ட் - ஸ்பேட் எக்ஸ் (Spadex) எனும் திட்டத்தை டிசம்பர் 30-ம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயல்படுத்தவுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற, ஏவப்பட்ட தேதியில் இருந்து சுமார் 10 நாட்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 'சேசர்' மற்றும் ‘டார்கெட்’ என இரண்டு செயற்கைக்கோள்கள் தனித்தனியாக விண்ணில் ஏவப்படும், பின்னர் அவை விண்வெளியில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும். ஆரம்பத்தில், செயற்கைக்கோள்கள் சிறிய வேக வேறுபாட்டுடன் பிரிந்து, சுமார் 10-15 கிலோமீட்டர் வரை விலகிச் செல்லும். பின்னர் படிப்படியாக நெருங்கி வந்து கட்டுப்பாட்டுடன் இணைக்கப்படும். ஒவ்வொரு செயற்கைக்கோளிலும் புகைப்படக் கருவிகள் மற்றும் கதிர்வீச்சு அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்பேட் எக்ஸ் சோதனை இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான சந்திரயான்-4 மற்றும் எதிர்கால விண்வெளி நிலையத் திட்டத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu