இஸ்ரோவின் பெண் ரோபோ விண்வெளி வீராங்கனை வியோமித்ரா - இந்த ஆண்டில் விண்வெளி பயணம்

February 6, 2024

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - இஸ்ரோ, வியோமித்ரா என்ற பெண் ரோபோ விண்வெளி வீராங்கனையை உருவாக்கி வருகிறது. இந்த ரோபோ வீராங்கனை, நிகழாண்டின் மூன்றாம் காலாண்டில் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு முன்னதாக வியோமித்ரா அனுப்பப்படுகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. அதில், 3 விண்வெளி வீரர்கள் 7 […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - இஸ்ரோ, வியோமித்ரா என்ற பெண் ரோபோ விண்வெளி வீராங்கனையை உருவாக்கி வருகிறது. இந்த ரோபோ வீராங்கனை, நிகழாண்டின் மூன்றாம் காலாண்டில் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு முன்னதாக வியோமித்ரா அனுப்பப்படுகிறது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. அதில், 3 விண்வெளி வீரர்கள் 7 நாட்களுக்கு விண்வெளிப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கு முன்னதாக, மனிதர்களைப் போலவே உருவாக்கப்பட்டுள்ள, மனிதர்களின் செயல்பாடுகளைக் கொண்ட வியோமித்ரா என்ற ரோபோ அனுப்பப்படுகிறது. விண்வெளியில் மனித செயல்பாடுகளை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் இந்த ரோபோ உதவியாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu