அமெரிக்காவில், காவல்துறை வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்தது தொடர்பாக சர்ச்சை

September 14, 2023

கடந்த ஜனவரி 23ம் தேதி, காவல்துறை வாகனம் மோதி இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார். சாலையை கடக்கும் போது வேகமாக வந்த வாகனத்தில் அடிபட்டு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் வேடிக்கையாக பேசுவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜானவி கண்டுலா என்ற 23 வயது இந்திய மாணவி விபத்தில் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. அதன்படி நடந்த விசாரணையில், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வந்த காவல்துறை வாகனம் அவர் மீது […]

கடந்த ஜனவரி 23ம் தேதி, காவல்துறை வாகனம் மோதி இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார். சாலையை கடக்கும் போது வேகமாக வந்த வாகனத்தில் அடிபட்டு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் வேடிக்கையாக பேசுவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜானவி கண்டுலா என்ற 23 வயது இந்திய மாணவி விபத்தில் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. அதன்படி நடந்த விசாரணையில், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வந்த காவல்துறை வாகனம் அவர் மீது மோதியதில், 100 மீட்டர் அளவுக்கு அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். விபத்தில் ஏற்பட்ட காயங்களால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த விபத்து தொடர்பாக காவல் ஆய்வாளர்கள் வேடிக்கையாக பேசுவது வெளிவந்துள்ளது. விபத்து குறித்து அவர்கள் சிரிப்பதும், மாணவியின் உயிரை துச்சமாக மதித்து பேசுவதும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த அன்று, ஜானவி கண்டுலா சாலை விதிமுறைகளை மீறவில்லை. ஆனால், அந்த சாலையில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற விதிமுறையை, காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்த கெவின் டேவ் மீறி உள்ளார். இதற்கு, அவசர அழைப்பு தொடர்பாக, காவல் அதிகாரி வேகமாக சென்றதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu