ஏசியன் மாநாடு - இந்தியா மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

November 12, 2022

கம்போடியாவில் 19வது ஏசியன் மாநாடு நடந்து வருகிறது. அந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். அங்கு, அவர், உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. குலேபாவுடன் தானிய கொள்கை மற்றும் அணு ஆயுதப் போர் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வரும் […]

கம்போடியாவில் 19வது ஏசியன் மாநாடு நடந்து வருகிறது. அந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். அங்கு, அவர், உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

குலேபாவுடன் தானிய கொள்கை மற்றும் அணு ஆயுதப் போர் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை கவனம் ஈர்த்துள்ளது. போரினால், உலக அளவில் உணவு பஞ்சம் அதிகரித்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சிங்கப்பூர், இந்தோனேஷியா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் ஜெய்சங்கர் சந்தித்தார். மேலும், இந்திய உறவு குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu