மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி லாவ்ரோவ் செர்ஜியை சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐந்து சுற்று பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவருக்கு அந்நாட்டின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி லாவ்ரோவ் செர்ஜியை சந்தித்தார் அப்போது இருவரும் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு போன்ற துறைகளில் அவர்கள் விவாதம் செய்தனர். அதோடு அவர் அதிபர் புதினை சந்தித்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வருமாறு புதின் அழைப்பு விடுத்தார்.














