முறையான ஆவணங்களின்றி வந்திறங்கிய 253 இந்தியர்களை திருப்பி அனுப்பிய ஜமைக்கா

May 10, 2024

மேற்கிந்திய தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவுக்கு இந்தியாவிலிருந்து 253 பேர் விமானம் வழியாக சென்றுள்ளனர். முறையான ஆவணங்கள் இன்றி வந்திறங்கிய அவர்களை ஜமைக்கா திருப்பி அனுப்பியுள்ளது. ஒரே விமானத்தில் 250 இந்தியர்கள் ஜமைக்கா நாட்டுக்கு வந்திறங்கியது சந்தேகத்தை எழுப்பியது. மேலும், வந்திறங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். எனவே, இவர்கள் அனைவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என ஜமைக்கா நாட்டு அதிகாரிகள் கருதினர். அதன் பெயரில், அவர்கள் அனைவரும் துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்திய […]

மேற்கிந்திய தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவுக்கு இந்தியாவிலிருந்து 253 பேர் விமானம் வழியாக சென்றுள்ளனர். முறையான ஆவணங்கள் இன்றி வந்திறங்கிய அவர்களை ஜமைக்கா திருப்பி அனுப்பியுள்ளது.

ஒரே விமானத்தில் 250 இந்தியர்கள் ஜமைக்கா நாட்டுக்கு வந்திறங்கியது சந்தேகத்தை எழுப்பியது. மேலும், வந்திறங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். எனவே, இவர்கள் அனைவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என ஜமைக்கா நாட்டு அதிகாரிகள் கருதினர். அதன் பெயரில், அவர்கள் அனைவரும் துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu