தொழில் அதிபர் அம்பானியின் இரண்டாவது மகனின் திருமணத்தில் உலக தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சன்ட்க்கும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சிகள் மார்ச் 1 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் பெரும்பாலானவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தலைவர்கள் ஜாம்நகருக்கு வருகை தருகின்றனர். மேலும் அவர்கள் நேரடியாக ஜாம்நகருக்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய முகேஷ் அம்பானி அரசுக்கு கோரிக்கை விடுத்ததாக தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜாம்நகர் விமான நிலையத்திற்கு பத்து நாட்கள் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்கள் நேரடியாக ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியும். பின்னர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் புறப்பட்டு செல்ல முடியும். இந்த அனுமதி பிப்ரவரி 25 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.