தடை முடிந்து மீண்டும் களத்தில் ஜானிக் சின்னர் – ரோம் போட்டிக்கான பயிற்சி ஆரம்பம்

3 மாதம் தடை முடிந்து ஜானிக் சின்னர் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இத்தாலியைச் சேர்ந்த 23 வயதான டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றதற்குப் பிறகு, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியிருந்தார். கடந்த ஆண்டு மார்ச்சில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட மருந்துப் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சர்வதேச டென்னிஸ் ஏஜென்சிக்கு அளித்த விளக்கம் ஏற்கப்பட்டது. இருப்பினும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் (WADA) ஒரு ஆண்டு தண்டனை […]

3 மாதம் தடை முடிந்து ஜானிக் சின்னர் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த 23 வயதான டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றதற்குப் பிறகு, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியிருந்தார். கடந்த ஆண்டு மார்ச்சில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட மருந்துப் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சர்வதேச டென்னிஸ் ஏஜென்சிக்கு அளித்த விளக்கம் ஏற்கப்பட்டது. இருப்பினும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் (WADA) ஒரு ஆண்டு தண்டனை கோரி வழக்குப் போட்டது. பின்னர் ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் சின்னர் மூன்று மாத தண்டனையை ஏற்றுக்கொண்டார். இதற்கு ஜோகோவிச் மற்றும் செரினா வில்லியம்ஸ் போன்ற வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ரோமில் நடைபெறவுள்ள டென்னிஸ் தொடரில் சின்னர் மீண்டும் போட்டியிடவுள்ளார். அவருக்கு முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்டதால், நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாட உள்ளார். இதற்கான பயிற்சியை அவர் ஆர்வத்துடன் ஆரம்பித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu