ஜப்பான் நாட்டின் ஸ்லிம் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
ஜப்பான் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஸ்லிம் என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் நேற்று நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரை இறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெறுகிறது. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. நிலவின் மேற்பரப்பில் நூறு மீட்டர் பரப்புக்குள் துல்லியமாக தரையிறங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் நிலவின் ஸ்னைப்பர் என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக ஸ்லிம் விண்கலத்தை ஏவும் பணி மோசமான வானிலை காரணமாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.