ஜப்பான் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
ஜப்பான் மத்திய வங்கி கடந்த எட்டு ஆண்டு காலமாக எதிர்மறை வட்டி விகிதங்களை நடைமுறைப்படுத்தியது. தற்போது இதனை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தை உயர்த்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக வட்டி விகிதம் மைனஸ் 0.1 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இந்நிலையில் புதிய வட்டி விகிதக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மத்திய வங்கியில் வைப்பு தொகைக்கு 0.1 சதவீதம் வட்டி செலுத்தப்படும். குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மைனஸ் 0.1 சதவீதத்திலிருந்து 0 முதல் 0.1 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜப்பான் மத்திய வங்கி எதிர்மறை வட்டி விகிதங்களில் இருந்து விலகும் கடைசி மத்திய வங்கி ஆகும்.