பிரதமர் அலுவலகத்தில் தனியார் விருந்து - ஜப்பான் பிரதமர் மகன் ராஜினாமா

May 30, 2023

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் மகன் ஷோடாரோ கிஷிடா, பிரதமர் அலுவலகத்தில் தனியார் விருந்து நிகழ்ச்சி கொண்டாடினார். அரசாங்க இடத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதால், சர்ச்சை எழுந்தது. எனவே, அவர் பிரதமரின் நிர்வாகக் கொள்கை செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஷோடாரோ கிஷிடா, அரசாங்க இடத்தில் தனியார் விருந்து வைத்தது தொடர்பான புகைப்படங்கள் ஜப்பான் ஊடகங்களில் வெளியாகின. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன், இது தொடர்பாக அரசியல் விவாதங்கள் எழுந்தன. இந்த விவகாரம் […]

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் மகன் ஷோடாரோ கிஷிடா, பிரதமர் அலுவலகத்தில் தனியார் விருந்து நிகழ்ச்சி கொண்டாடினார். அரசாங்க இடத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதால், சர்ச்சை எழுந்தது. எனவே, அவர் பிரதமரின் நிர்வாகக் கொள்கை செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஷோடாரோ கிஷிடா, அரசாங்க இடத்தில் தனியார் விருந்து வைத்தது தொடர்பான புகைப்படங்கள் ஜப்பான் ஊடகங்களில் வெளியாகின. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன், இது தொடர்பாக அரசியல் விவாதங்கள் எழுந்தன. இந்த விவகாரம் சமூக வலைதளங்கள் மட்டுமின்றி, ஜப்பான் நாடாளுமன்றம் வரையில் எதிரொலித்தது. எனவே, தான் செய்த தவறுக்கு பொறுப்பேற்று, ஷோடாரோ கிஷிடா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu