ஜப்பானில் எச்.2.ஏ. ராக்கெட் மூலம் 'ஸ்லிம்' விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு ஏவப்பட்டது.
ஜப்பானின் விண்வெளி மையம் சார்பில் நிலவை ஆய்வு செய்யும் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக ஸ்லிம் என்ற விண்கலத்தை விண்வெளி மையம் தயாரித்துள்ளது. இந்த விண்கலத்தை எச்.2.ஏ. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டது. ஆனால் இந்து திட்டம் பல்வேறு காரணங்களால் மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஜப்பான் நாட்டின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள தனிஷிமா விண்வெளி மையத்திலிருந்து எச்.2.ஏ ராக்கெட் மூலம் 'ஸ்லிம்' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் ஜனவரி மாதத்தில் நிலவில் தரையிறங்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் நிலவை ஆய்வு செய்யும் உலகின் ஐந்தாவது நாடு ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.