நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ஸ்லிம் என்ற விண்கலத்தை ஜப்பான் அனுப்பி உள்ளது. இந்த விண்கலம் நாளை நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 25ஆம் தேதி, நிலவு சுற்றுவட்ட பாதைக்குள் ஸ்லிம் விண்கலம் நுழைந்தது. இது நாளை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்படுகிறது. அதற்காக, இன்று, அதன் சுற்றுவட்ட பாதை தூரம் 600 கிலோ மீட்டர் அளவில் குறைக்கப்பட்டுள்ளது. நிலவை சுற்றி, கிட்டத்தட்ட வட்டமான பாதையில் 600 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்லிம் விண்கலம் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இது ஜப்பான் நேரப்படி ஜனவரி 20 காலை 12 மணி அளவில், சர்வதேச நேரப்படி காலை 10 மணி அளவில், தரையிறங்கத் தொடங்கும். அதிலிருந்து சரியாக 20 நிமிடங்களில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, ஜப்பான் விண்வெளி மையத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில், ஸ்லிம் விண்கலத்தின் தரையிறங்கும் நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.