ஜெயலலிதாவின் நகைகள் ஏலம்

February 26, 2024

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீதான அபராத தொகையை கட்டுவதற்காக அவரது சொத்துக்களை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை கட்டுவதற்காக அவரது சொத்துக்களை ஏலம் விட அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு நான்காண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபரதம் விதித்தது. இதே வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டு சிறை […]

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீதான அபராத தொகையை கட்டுவதற்காக அவரது சொத்துக்களை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை கட்டுவதற்காக அவரது சொத்துக்களை ஏலம் விட அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு நான்காண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபரதம் விதித்தது. இதே வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டு சிறை தண்டனையும், தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து கர்நாடகா ஹைகோர்ட்டில் ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் அப்பீல் செய்தனர். பின்னர் நான்கு பேரையும் நிரபராதிகள் என விடுதலை செய்தது. அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜெயலலிதா உயிரிழந்தார். சுப்ரீம் கோர்ட் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக கூறிவிட்டு செலுத்த வேண்டிய அபராத தொகையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தது. இதுவரை அவருக்கான தொகையை யாருமே செலுத்த முன்வராததால் அவரது சொத்துக்களை விற்று அபராதம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 28 கிலோ நகைகள் 800 கிலோ வெள்ளி நகைகள், வைர நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினார் .இவைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. தற்போது அந்த நகைகள் ஏலம் விட்டு அதில் ஒரு பகுதியை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நகைகள் மட்டும் ரூபாய் நாற்பது கோடி வரை ஏலம் போகும் மீதமுள்ள 60 கோடிக்கு அவரது அசையா சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை தவிர வழக்கு கட்டணம் ஐந்து கோடி ரூபாயை கர்நாடகா அரசுக்கு வழங்க வேண்டியுள்ளது. இதற்கும் ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு அவை முழுமையாக கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu