சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து உள்ளது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று ரூ.440 அதிகரித்து உள்ளது . அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.