இந்தியாவைச் சேர்ந்த பிரபல நகை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ், 2300 கோடி ரூபாய் மதிப்பில், பொது பங்கீட்டு முறைக்கு (ஐபிஓ) வருவதாக சொல்லப்பட்டிருந்தது ஆனால், இந்த ஐபிஓ -வை திரும்ப பெறுவதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை. அமைப்புக்கு சமர்ப்பித்த அறிக்கையில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணங்கள் குறித்த விளக்கங்கள் கூறப்படவில்லை.
கடந்த வருட மார்ச் மாதத்தில், பொது பங்கீட்டுக்கு வருவதன் மூலம், சுமார் 1400 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிதி, நிறுவனத்தின் கடனை முன்கூட்டியே அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த ஐபிஓ 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஐபிஓ முடிவில் இருந்து ஜாய் ஆலுக்காஸ் பின்வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், இந்தியாவில், கடந்த வருட தங்க விற்பனை 3% சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.