முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், டிசம்பர் 29, 2024 அன்று 100 வது வயதில் காலமானார். இந்த நிலையில், பூமியில் வேறு எவரும் அடையாத சிறப்பை அவர் அடைந்துள்ளார். அதாவது, அவரது பெயர் கொண்ட கடிதம் சூரிய குடும்பத்துக்கு வெளியே பயணித்து கொண்டிருக்கும் பெருமையை அடைந்துள்ளது. 1977-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாயேஜர் கோல்டன் ரெக்கார்டின் மீது அவர் கையொப்பமிட்ட ஒரு கடிதம் இப்போது பூமியில் இருந்து 14 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது. அந்த கடிதத்தில், "இது ஒரு சிறிய, தொலைதூர உலகத்திலிருந்து கிடைத்த பரிசு... நாங்கள் உங்கள் நேரத்தை வாழ முயற்சி செய்கிறோம், அதனால் நாங்கள் உங்களுக்காக வாழ முடியும்" எனும் கார்ட்டரின் செய்தி பதியப்பட்டுள்ளது.
வாயேஜர் 1, கார்ட்டர் அனுப்பிய அமைதி மற்றும் நம்பிக்கையின் காலமற்ற செய்தியுடன் பயணிக்கிறது. இது எதிர்காலத்தில் வேறு விண்வெளி உயிரினங்களிடம் நமது உலகத்தை அறிமுகப்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.