ஒடிசாவில் மேக் இன் ஒடிசா மூன்றாவது நிகழ்வு முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஜிந்தால், அதானி, மிட்டல், டாடா, வேதாந்தா மற்றும் எஸ்ஸார் குழுமங்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்காக ஒடிசா மாநிலத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன.
மாநில அரசின் அறிக்கை படி, மொத்தம் 585742.26 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட உள்ளன. சாஜன் ஜிந்தால், தனது நிறுவனம் ஏற்கனவே 30000 கோடி ரூபாயை ஒடிசாவில் முதலீடு செய்துள்ளதாகவும், மேலும், 30000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்தார். கரண் அதானி பேசுகையில், ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளில் 20,000 கோடி முதலீடு செய்யப்பட்ட நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில், ஒடிசாவில், 60,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து, லக்ஷ்மி மிட்டல், பிரசாந்த் ரூயா, நரேந்திரன் ஆகியோர் தங்கள் நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களை அறிவித்தனர். பின்னர், அனில் அகர்வால், வேதாந்தா அலுமினியம் பூங்காவிற்கு காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.