டிஜிட்டல் கட்டண சேவையில் களமிறங்கும் ஜியோ

March 12, 2024

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம், டிஜிட்டல் கட்டண சேவை துறையில் புதிதாக களமிறங்குகிறது. இதற்காக ஜியோ பே என்ற செயலி புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. இது, பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற செயலிகளுக்கு நேரடி சவாலாக களமிறங்குகிறது. ஜியோ யுபிஐ என்ற பெயரில் ஜியோ நிறுவனத்தின் டிஜிட்டல் வங்கி சேவைகள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம், சில்லறை வணிக விற்பனையகங்களில் யுபிஐ பரிவர்த்தனைகள் கொண்டுவரப்படுகின்றன. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பே செயலி பரிசோதனை அடிப்படையில் சேவைகளை […]

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம், டிஜிட்டல் கட்டண சேவை துறையில் புதிதாக களமிறங்குகிறது. இதற்காக ஜியோ பே என்ற செயலி புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. இது, பேடிஎம், போன் பே, கூகுள் பே போன்ற செயலிகளுக்கு நேரடி சவாலாக களமிறங்குகிறது.

ஜியோ யுபிஐ என்ற பெயரில் ஜியோ நிறுவனத்தின் டிஜிட்டல் வங்கி சேவைகள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம், சில்லறை வணிக விற்பனையகங்களில் யுபிஐ பரிவர்த்தனைகள் கொண்டுவரப்படுகின்றன. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஜியோ பே செயலி பரிசோதனை அடிப்படையில் சேவைகளை தொடங்கியுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் கட்டண முறை வேகமான வளர்ச்சி கண்டு வரும் சூழலில், ஏற்கனவே உள்ள யுபிஐ தளங்களுக்கு போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாக களம் இறங்கி உள்ளது புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu