சுவாமி ராம பத்ராச்சாரியாவிற்கு ஞானபீட விருது

February 19, 2024

சுவாமி ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் மற்றும் ஹிந்தி பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ஞான பீட விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற இந்து ஆன்மீகத் தலைவர், கல்வியாளர் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் சித்திர கூடத்தில் உள்ள துளசி பீடத்தின் தலைவராகிய ராமபத்ராச்சாரியார் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர் ஆவார். இவருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்குவதாக தேர்வு குழு அறிவித்துள்ளது. இதே போன்று இந்தி பட உலகில் முன்னணி பாடலாசிரியர் […]

சுவாமி ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் மற்றும் ஹிந்தி பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ஞான பீட விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற இந்து ஆன்மீகத் தலைவர், கல்வியாளர் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் சித்திர கூடத்தில் உள்ள துளசி பீடத்தின் தலைவராகிய ராமபத்ராச்சாரியார் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர் ஆவார். இவருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்குவதாக தேர்வு குழு அறிவித்துள்ளது. இதே போன்று இந்தி பட உலகில் முன்னணி பாடலாசிரியர் ஆன குல்சாருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது. இவர் 2002 இல் சாகித்ய அகாடமி விருதும், 2013 இல் தாதா சாகேப் பால்கே விருதும் பெற்றுள்ளார். மேலும் இதுவரை ஐந்து முறை தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu