முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வழங்குவதாக மனோஜ் பாண்டே அறிவித்துள்ளார்.
நாட்டில் முன்னாள் ஆயுத படை வீரர்கள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, நம்முடைய ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது.
ஓய்வு பெற்ற பின்னர் மூத்த ராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக ரெயில்வே, மெட்ரோ மற்றும் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் வேலை வாய்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார். அவர்களுக்கான சிகிச்சை பெறும் மருத்துவமனை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.